Idhaya Oli

Thursday, July 30, 2009

மழை



வானும் மண்ணும் இணைந்து


நடத்தும் ஒரு நாடகம்


இந்நாடகத்தில் வசனம் இல்லை


வாசம் உண்டு !


காண்போர் அதற்கு தரும்


பரிசு 'அருமை ' என்ற சொல்


இது தற்போது


சில வருடம் கழித்து


மழை என்றால்


குளியலறை ஷவர்

சுகமாகும் சுமைகள்


மலருக்கு இதழ் சுமையா?

மனிதனுக்கு திறமை சுமையா ?

தாய்க்கு சேய் சுமையா ?

முயற்சிக்கு வெற்றி சுமையா ?

இல்லை - சுகம் அது வேண்டும்.

சுகம் தோன்றும் - நீ

சுமையாக சுமையை எண்ணாவிட்டால்!